இன்றே கடைசி நாள்..!  மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

இன்றே கடைசி நாள்..!  மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு..!

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படிப்பு:

பள்ளி முடித்த மாணவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்த கல்லூரியில் சேர்வது என்பது பெரும் குழப்பமாகவே உள்ள ஒன்றாக உள்ளது. பெரும்பாலான மாணவர்களின் விருப்பம் மருத்துவம் படிக்கச் வேண்டும் என்பதே. எம்.பி.பி.எஸ் என்பது கைகூடாத மாணவர்கள் தங்களின் மருத்துவ விருப்பத்தை நினைவெற்றிகொள்ளவே மருத்துவம் சார்ந்த பல படிப்புகள் உள்ளது.

மருத்துவம் சார்த்த படிப்புகள்:

தமிழகத்தில் 2022 முதல் 2023ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில் சேர 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதேபோல் பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. 

மேலும் படிக்க: பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!

விண்ணப்பங்கள்:

இதுவரை 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

கடைசி நாள்:

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள இணையதளங்களில், ஆவணங்கள் சமர்பிக்காமலும் கட்டணம் செலுத்தாமலும் இருப்பவர்கள் இன்றே அனைத்தையும் சமர்ப்பிக்குமாறு மருத்துவ கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.