இன்று நீட் தேர்வு ...!!

இன்று நீட் தேர்வு ...!!

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பை படிக்க தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய நீட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். 

இந்நிலையில் இளநிலை மருத்துவப் படிப்புகளான  சோ்க்கைக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத இந்தியா முழுவதும் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.  தமிழ்நாட்டில் மட்டும் 1.47 லட்சம் போ் தோ்வெழுத விண்ணப்பித்துள்ளனா். 

இதையும் படிக்க:இங்கிலாந்து மன்னராக முடிசூட்டிக் கொண்டார் 3-ஆம் சார்லஸ்...!