இசையமைப்பாளர் டி.இமான் சத்தமே இல்லாமல் 2-வது திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!!

மனைவியை பிரிந்து சில மாதங்களிலேயே இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான் சத்தமே இல்லாமல் 2-வது திருமணம் - வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவரானவர் டி.இமான். இவரது இசையில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் அண்ணாத்தயை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பட படங்களுக்கு கமிட்டாகி இசையமைப்பதில் பிஸியாகவும் இருக்கிறார். சமீபத்தில் இவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக சட்டப்பூர்வமாக அறிவித்து இருந்தார். 

கடந்த 2008 ஆம் ஆண்டின் பொழுது மோனிகா என்பவரை கரம் பிடித்தார் இமான். இவர்களது திருமண ஆண்டுகளும் நீடித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருவரும் விவாகரத்து செய்யததாக அரசல்புரசலாக பேசப்பட்டது.

இதனை தொடர்ந்து டி.இமான் சட்டப்படி விவாகரத்து பெற்று விட்டதாகவும் தனது மனைவியை பிரிய போவதாகவும் டிசம்பர் மாதம் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இதன் பின்னதாக டி.இமான் சென்னையை சார்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தபடியாக இருந்தது. அதையடுத்து நேற்று இமான் மணக்கோலத்தில் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஷயம் என்னவென்றால் இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்து இருக்கிறார்.