நடிகர் விஷால் மீது சரமாரியாக கண்ணாடிபாட்டில் வீச்சு!  வைரலாகும் வீடியோ!!

படப்பிடிப்பில் நடந்த ஒரு சண்டைக்காட்சியின் வீடியோவை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஷால் மீது சரமாரியாக கண்ணாடிபாட்டில் வீச்சு!  வைரலாகும் வீடியோ!!

து.பா சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத அவரது 31வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கி,கொரோனா வைரஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு அம்சங்களுடன் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது  இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சண்டைக்காட்சியின் வீடியோவை நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,சில ஸ்டண்ட் நடிகர்கள் விஷாலை சுற்றி நின்று கொண்டு, அவர் மீது சரமாரியாக கண்ணாடி பாட்டில்களை மாறி மாறி எறியும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தத்ரூபமாக படமாக்கப்பட்ட இந்த காட்சிக்கு பிறகு விஷால் முகம் கழுவிக் கொள்வது போன்ற காட்சிகளும் இதில் இடம் பெற்றுள்ளன.விஷால் ரசிகர்கள் மத்தியில் இவ்வீடியோ வைரலாகி வருகிறது.