சூர்யா - ஜோதிகா வா இது? பார்ப்பதற்கே சின்ன பசங்கள் போல் காட்சியளிக்கும் கியூட் போட்டோ

சூர்யா - ஜோதிகா வா இது? பார்ப்பதற்கே சின்ன பசங்கள் போல் காட்சியளிக்கும் கியூட் போட்டோ

சூர்யா-ஜோதிகா இருவரும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சூப்பரான ஜோடி என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை தமிழ்நாடே கொண்டாடியது. அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் மீது ஆசை வைத்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துவந்த சூர்யா - ஜோதிகா தற்போதெல்லாம் மிகவும் தெளிவாக சமூகத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் படங்கள் மூலம் கொடுக்க ஆசைப்பட்டு கதைகள் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. தற்போது சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் வரை சென்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் தான் சூர்யா-ஜோதிகா இருவரின் புகைப்படமும் சிறுவயது நபர்களாக எடிட் செய்யப்பட்ட ஒரு கியூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் செம கியூட் என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.