அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் அப்டேட்!! சிங்கிள் டிராக்கை வெளியிட தயாராகும் படக்குழு!

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் அப்டேட்!!

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் அப்டேட்!! சிங்கிள் டிராக்கை வெளியிட தயாராகும் படக்குழு!

அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தின் சிங்கிள் டிராக் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதர்வா, பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் "குருதி ஆட்டம்". யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். "எட்டுத் தோட்டக்கள்" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த நில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி இப்படத்தின் "ரங்க ராட்டினம்" என்ற பாடலை வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் குருதி ஆட்டம் படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்திருக்கிறார்.