காதலனுடன் நெருக்கமான போட்டோக்களைப் போட்ட அமீர் கான் மகள் !!

நடிகர் அமீர் கானின் மகளான ஈரா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலனுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் ஹாட்டாக அவர் போட்டிருந்த போட்டோக்கள், இளைஞர்களுக்கு பொறாமையைக் கிளப்பி வருகிறது.

காதலனுடன் நெருக்கமான போட்டோக்களைப் போட்ட அமீர் கான் மகள் !!

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அமீர் கான். கிட்டத்தட்ட 40 வருடங்களாக பாலிவுட் உலகை ஆண்டு வரும் ‘கான்’களில் ஒருவராக இருக்கும் அமீர் கான், பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். இவர் நடித்த டங்கல் என்ற படம், உலகளவில் மாபெரும் வரவேற்புக் கண்டது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கி தற்போது லால் சிங் சாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். நகைச்சுவை கதையான இந்த படம் அத்வைத் சந்தாவால் இயக்கப்பட்டு வருகிறது.

தனது திரைப் பயணத்தில் வெற்றிக் கண்ட இவருக்கு இரண்டு முறை விவாகரத்து ஆகியுள்ளது. 1986ம் ஆண்டு ரீனா தத்தா எபரவைத் திருமணம் செய்து கொண்ட அமீருக்கு ஈரா கான், ஜுபைத் கான் என இரண்டு மகள்கள் உண்டு. 15 வருடங்கள் கடந்த இவர்களது திருமண வாழ்க்கை 2002ம் ஆண்டு முடிவடைந்தது. பின், கிரண் ராவ் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாந்து வந்த இவர்களது திருமண வாழ்க்கையும் பல ஆண்டுகள் நீடிக்கவில்லை. அதே 15 ஆண்டுகள் முடிவடைந்ததும் கிரண் மற்றும் அமீர் தங்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர். இவர்களுக்கு ஆசாத் ராவ் என்கிற மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமீரின் மூத்த மகளான ஈரா கான், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். தனது படு கிளாமரான போட்டோக்களால் இளைஞர்களைக் கவர்ந்து ஈர்க்கும் அவர், அடிக்கடி நீச்சல் உடைகளில் பதிவு செய்வார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, யூரிபிடிஸ் மீடியா என்ற நாடகத்தின் மூலம், நாடக இயக்குனராக அறிமுகமானார். இதில் பாலிவுட் நடிகையான ஹேசல் கீச் என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் ஈரா கான் தனது பெற்றோரின் பிரிவு தனக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தந்ததாகவும் மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் கூறியிருந்தார். அதுவும் சோசியல் மீடியாக்களில் படு வைரலான நிலையில், ஈராவிற்கு ஃபாலோயர்கள் கணக்கு அதிகரித்தது. 5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட இவருக்கு, ஆண் ரசிகர்கள் தான் அதிகம். இந்நிலையில், தற்போது, தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ஈரா, தனது காதலனுடன் போட்டோக்கள் எடுத்து அதனை தனது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருந்தார்.

தனது பெற்றோருடன், ஈராவும், அவரது காதலனான நுபூர் ஷிக்காரே என்பவரும் நெருக்கமான போட்டோக்களை எடுத்துக் கொண்டுள்ளனர். தனது தாயான ரீனா தத்தா மட்டுமின்றி, தந்தை அமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவ் மற்றும் அவரது மகன் ஆசாதுடனும் இணைஅந்து தனது வீட்டில் நீச்சல் குளப் பார்ட்டி செய்திருக்கிறார். தனது நண்பர்களுடன் சந்தோஷமாக துள்ளி குதித்து விளையாடும் ஈரா, மல்டி கலர் பிகினியில் காட்சியளிக்கிறார்.

கேக்கை வெட்டி, பலூனுடன் விளையாடிய ஈராவின் போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. ஒரு புறம் இப்படி இருக்க, ஈராவை ஃபாலோ செய்து வரும் ஆண் இளைஞர்களுக்கு இந்த போட்டோக்கள் சந்தோஷத்தைத் தந்தாலும், பொறாமையைக் கிளப்பியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சிங்கிள்களின் சாபம் அதிகரித்து வர, ஈரா தனது பிறந்தநாளை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்.