தீபாவளிக்கு வருகிறார் அண்ணாத்த... உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்..

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தீபாவளிக்கு வருகிறார் அண்ணாத்த...  உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்..
விஸ்வாசம் படத்திற்கு பிறகு இயக்குனர் சிவா ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பரவலுக்கு இடையே ஐதராபாத்தில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக ரஜினிகாந்த் வெளிநாடு சென்றுள்ளார்.

இதனிடையே அண்ணாத்த திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.