“தசாவதாரம் -2” படத்துக்கான அதிரடி முடிவை வெளியிட்ட : கே.எஸ்.ரவிக்குமார்!!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியிருக்கிறார். 

“தசாவதாரம் -2” படத்துக்கான அதிரடி முடிவை வெளியிட்ட : கே.எஸ்.ரவிக்குமார்!!

அண்மையில் இவரது நடிப்பிலும் , ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தை தயாரித்து அதில் தர்ஷன் மற்றும் லாஸ்லியாவுடன் இணைந்து நடித்தும் இருக்கிறார். இவர்கள் மூவரும் திருப்போரூரில் இருக்கும் எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். 

இவ்விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேசிய பொழுது திடீரென கமல் எப்பொழுதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர், வலி இல்லாமல் வெற்றி இல்லை என்பது அவரது பாலிசியாகும்.தசாவதாரம் திரைப்படத்துக்கும் அப்படித்தான் நடித்தார். சில தினங்களுக்கு முன்பு தான் தசாவதாரம் வெளிவந்து 12 வருடங்கள் ஆயிற்றா? என்ற ஆச்சரியத்துடன் இரண்டு மணி நேரம் இதைப் பற்றி பேசினார். 

மேலும் பேசிய அவர் சில தினங்களுக்கு முன்னதாக இருந்தே ரசிகர்கள் என்னையும் கமல்ஹாசனையும் பார்த்து “தசாவதாரம் -2” எப்போழுது என கேள்வி கேட்டு வருகின்றனர். “ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடி ரூபாயினை கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்றோரு இன்னொரு திரைப்படத்தை உருவாக்கவே முடியாது, ஏனெனில் அது தசாவதாரம்” என்றார். தசாவதாரம் இரண்டாம் பாகத்துக்கு வழியே இல்லை என்றார். 

இதன் பின் ஓடிடி தளங்களால் சினிமாவுக்கு பாதிப்பா எனபதை குறித்து எல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை, ஏனெனில் தொலைக்காட்சி வந்த ஆரம்ப காலத்தில் சினிமா அழிந்து விடும் என்றனர். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவுமே ஈடாகாது. அதே சமயம் ஒடிடி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது அதனை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும் என்றார். மேலும் அண்மையில் வெளியாகி இருக்கும் எங்கள் கூகுள் குட்டப்பாவை அனைவரும் திரையில் சென்று பாருங்கள் தவர விட்டவர்கள் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது அவ்வப்போது தவறாமல் பார்த்து மகிழுங்கள் என விடைப்பெற்றார்.