நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் நிரபராதி என அறிவிப்பு..!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் நிரபராதி என அறிவிப்பு..!

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி என தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வந்த நிலையில் தற்போது ஆர்யன் கான் நிரபராதி என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.