காதலியுடன் டேட்டிங்.. ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட உடனே நீக்கிய துப்பாக்கி பட வில்லன்

தமிழக திரையுலகில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த நடிகர் வித்யூத் ஜாம்வால், தற்போது தனது காதலியுடன் ரகசியமாக சென்ற சுற்றுலா பயணத்தின் தகவல் வெளியாகியுள்ளது. 

காதலியுடன் டேட்டிங்.. ரகசிய புகைப்படத்தை வெளியிட்ட உடனே நீக்கிய துப்பாக்கி பட வில்லன்

அஞ்சான் திரைப்படத்தில், நடிகர் சூர்யாவிற்கு நண்பனாக நடித்த வித்யூத் ஜாம்வால் தனது காதலியுடன் தாஜ்மஹாலுக்கு ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. 

தமிழ்த் திரைப்படத்தில் பில்லா2 வில்லனாக  நடித்தார். அதன்பின், துப்பாக்கி படத்திலும் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லனாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் வித்யூத்தும், நந்திதாவும் தாஜ்மஹாலுக்கு சென்று வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராகில் வெளியிட்டிருந்தார். 

பிறகு, சிலமணி நேரத்தில் அவரே அதை நீக்கி விட்டார். ஆனால்,  ரசிகர்கள் அதனை பகிர்ந்துள்ளனர். அது மிகவும் வைரலாகி வருகின்றது. தற்போது, அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.