பிரபல நடிகருடன் அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொன்னாங்க; பகீர் குற்றச்சாட்டு வைத்த நடிகை இஷா கோபிகர்!

பிரபல நடிகர் ஒருவர் தன்னை அட்ஜஸ்ட் செய்ய சொல்லியதாக நடிகை இஷா கோபிகர் குற்றச்சாட்டு வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகருடன் அட்ஜெஸ்மெண்ட் செய்ய சொன்னாங்க; பகீர் குற்றச்சாட்டு வைத்த நடிகை இஷா கோபிகர்!

தமிழ் திரையுலகில் ‘என் சுவாச காற்றே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை இஷா கோபிகர். இதனைத்தொடர்ந்து ‘நெஞ்னிலே’, ‘ஜோடி’, ‘நரசிம்மா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு இந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.   தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை இஷா கோபிகர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் பேசியபோது, ‘சினிமாவுக்காக அட்ஜஸ்ட் செய்ய கோரி வற்புறுத்தும் நிலைமை இங்கே அதிகம் உள்ளது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, நானே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது பிரபல நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டுமென்று அந்த படத்தின் தயாரிப்பாளர் வற்புறுத்தினார், ஆனால் நான் முடியாது என்று சொல்லி விட்டதால் அந்த படத்தில் இருந்து என்னை நீக்கினார்கள்.

இதேபோல்  பல இடங்களில் அட்ஜெஸ்ட் செய்யாமல் இருந்ததால் தான் நான் பல திரைப்பட வாய்ப்புகளை இழந்துவிட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.