கரீனாகபூர்  இடத்தை பிடித்த கங்கனா ரனாவத்!

சீதையாக  நடிக்க கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும்,மேலும்,  சீதை  கதாபாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் பொருத்தமாக இருப்பார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

கரீனாகபூர்  இடத்தை பிடித்த கங்கனா ரனாவத்!

பாகுபலி நாயகன் பிரபாஸின் 22வது படமான 'ஆதிபுருஷ்' படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் ராமன் வேடத்தில்  பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சையது அலி கான் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் 3 டி முப்பரிமாண தொழில்நுட்பத்தில்  உருவாக உள்ளது. 

இப்படத்தில் , சீதை கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிப்பதாகவும்,அவருக்கு சம்பளமாக ரூ.12 கோடி சம்பளமும் பேசப்பட்டது. ஆனால்,கரீனா கபூர் சீதையாக  நடிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கங்கனா ரனாவத்திடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாகவும்,மேலும்,  சீதை  கதாபாத்திரத்திற்கு கங்கனா ரனாவத் பொருத்தமாக இருப்பார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.