நடிகர் விஜய்க்கு கவிதை எழுதிய - நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகர் விஜயின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். 

நடிகர் விஜய்க்கு கவிதை எழுதிய - நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தளபதி விஜயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியும் விதவிதமாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதன் இடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் விஜய்க்கு சிறிய கவிதை எழுதி பதிவிட்டுள்ளார்.

அதில், பூ போல மனசு.. ஏறாத வயசு.. கோலிவுட்டின் வாரிசு.. அந்த பெயர் தளபதி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.