நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1 தேதிக்கு ஒத்திவைப்பு - நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1 தேதிக்கு ஒத்திவைப்பு - நீதிமன்றம் உத்தரவு!

நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை ஏப்ரல் 1 தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷியாம் அபிசேக் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கின் விசாரணையின் போது மீரா மிதுன் ஆஜராகததால், பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, அடுத்த மாதம் 4 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.