அட நம்ம ரம்யா பாண்டியனா இது ? என்ற ரேஞ்சுக்கு கையில் தாமரை பூவுடன் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்

அட நம்ம ரம்யா பாண்டியனா இது ? என்ற ரேஞ்சுக்கு கையில் தாமரை பூவுடன்  ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் புடவையில் இருப்பது போன்று போடோஷீட் நடத்தி சமூக வலைதளங்களின் கவனத்தை ஈர்த்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். 

இதனைத்தொடர்ந்து இயக்குனர் சமுத்திரகனிக்கு ஜோடியாக ஆண் தேவை என்ற படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய எதிர்ப்பார்புகளை அவருக்கு பெற்று தரவில்லை என்றே கூறலாம் அதனை தொடர்ந்து இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகளும் அமையவில்லை என்றும் கூறலாம். 

ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான  ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது. தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக, விதவிதமாக சேலையில் படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் கையில் தாமரை பூவுடன்  கூடிய ஒரு புதிய போட்டோ ஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ரம்யா பாண்டியனா இது என கமெண்ட் பண்ணியதுடன் மட்டுமில்லாமல்  புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்தும் வருகிறார்கள்.