அந்தரத்தில் தலைகீழாக தொங்கியவாறு போஸ் கொடுக்கும் வரலட்சுமிசரத்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் வீடியோவை நடிகை வரலட்சுமி சரத்குமார்  தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளதால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தரத்தில் தலைகீழாக தொங்கியவாறு  போஸ் கொடுக்கும் வரலட்சுமிசரத்குமார்..! இணையத்தில்  வைரலாகும் வீடியோ!

தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கிய ’போடா போடி’  திரைப்படம்  மூலம் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதற்கு பிறகு தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, எச்சரிக்கை, சண்டைக்கோழி 2, மாரி 2, நீயா2, சர்கார் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். 

அந்தவகையில் தற்போது 6 படங்களுக்கும் மேலாக கமிட்டாகி நடித்து வருகிறார்.  சமீபத்தில் கூட அவர் சமந்தா நடித்துவரும் ’யசோதா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இவருக்கும் சோஷியல் மீடியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருப்பதால் அடிக்கடி போட்டோஸ்களை போட்டு ரசிகர்களிடம் இணைப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தரத்தில் தலைகீழாகவும், அந்தரத்தில் உட்கார்ந்து கொண்டு யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே  வைரலாகி வருகிறது,