சர்வதேச திரைப்பட விழாவில் திடீரென கழன்று விழுந்த நடிகையின் ஆடை..! உடனடியாக சரிசெய்த உதவியாளர்...!

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்த நடிகை ஒருவரின் ஆடை திடீரென கழன்று விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வதேச திரைப்பட விழாவில் திடீரென கழன்று விழுந்த நடிகையின் ஆடை..! உடனடியாக சரிசெய்த உதவியாளர்...!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்சில் 75வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே 17ந்தேதி தொடங்கியது. அன்று தொடங்கிய இவ்விழா மொத்தம் 12 நாட்கள் அதாவது வருகிற 28ந்தேதி வரை கோலாகலமாக  நடைபெற உள்ளது. இந்த திரைப்பட விழாவில் இந்திய பிரபலங்கள் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிவப்பு கம்பள மரியாதை கொடுக்கப்பட்டது. 

சர்வதேச திரைப்பட விழா ஆரம்பித்த நாளில் இருந்து ஏதாவதொரு சர்ச்சை எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஒருவரின் ஆடை திடீரென கழன்று விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் என்பவர் நடிகைக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடையில் சிவப்பு கம்பள வரவேற்பில் ரசிகர்களுக்கு காட்சி அளித்தார்.

அப்போது அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது ஆடை கழன்று விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை தர்மசங்கடமான நிலைக்கு உட்பட்டார். இதனையடுத்து உடனடியாக நடிகையின் உதவியாளர்கள் வந்து அவரது ஆடையை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.