சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் கமிட்டான நடிகை... வெளிவந்த தகவல்கள்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் கமிட்டான நடிகை... வெளிவந்த தகவல்கள்

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெவ்வேறு திசையில் பயணிக்கும் நான்கு கதாபாத்திரங்களையும் இறுதியில் ஒன்றாக இணைக்கும் விதமாக அமைந்திருந்தது.

மேலும் இந்த படத்தில் வேறு எந்த முன்னணி நடிகரும் நடிக்க தயங்கும் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர் தவிர இந்த படத்தில் சமந்தா, பகத் பாசில், காயத்ரி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

குறிப்பாக நடிகை ரம்யா கிருஷ்ணனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால் இந்த கேரக்டருக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன் இல்லையாம். முதலில் இந்த கேரக்டருக்காக நடிகை நதியா தான் ஒப்பந்தமாகி உள்ளார்.

Pin on Saree


பின்னர் ஏதோ சில காரணங்களால் நதியா இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகி விட்டாராம். அதன் பின்னரே ரம்யா கிருஷ்ணன் இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.