மீண்டும் அட்லி- ஜெய் கூட்டணி..? அதுவும் இந்த முறை ஹீரோ இல்லையாம்

ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லியின் இயக்கத்தில் ஜெய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் அட்லி- ஜெய் கூட்டணி..? அதுவும் இந்த முறை ஹீரோ இல்லையாம்

சென்னை 600028, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகர் ஜெய். 

ராஜா ராணி படத்தில் தனது எதார்த்த நடிப்பின் மூலம் திரை வாழ்க்கையில்  ஜெய்க்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இப்போது அவரது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது, நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய படத்திற்காக இயக்குநர் அட்லீவுடன் அவர் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அட்லீ தனது மனைவி பிரியாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  அவரது முதல் தயாரிப்பாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படம் வெளி வந்தது. 

ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில், ஜெய் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.