ப்ளூ சட்டை மாறனுக்கு "வித்தைகாட்டிய" அஜித் ரசிகர்கள்?.. அடி ரொம்ப பலமோ? தியேட்டரில் நடந்தது என்ன?

சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் அஜித் ரசிகர்களால் விமர்சகர் புளூசட்டை மாறன் தாக்கப்பட்டதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ப்ளூ சட்டை மாறனுக்கு "வித்தைகாட்டிய" அஜித் ரசிகர்கள்?.. அடி ரொம்ப பலமோ? தியேட்டரில் நடந்தது என்ன?

கோலிவுட் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். அவர் சமீபத்தில் அஜீத் குமாரின் 'வலிமை' படத்தின் கதை மற்றும் மேக்கிங் குறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும் அஜித்தை தனிப்பட்ட முறையிலும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் சென்னையில் உள்ள பிவிஆர் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றதாகவும், அங்கு அஜித் ரசிகர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாவும், மேலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. மேலும் அவர் ரசிகர்களால் தாக்கப்பட்டாரா என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இது குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது.. தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த?  நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ...வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார்.