பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ்நாட்டு வெளியீடு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியுள்ளது..!

பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு.. ரெட் ஜெயண்ட் மூவிஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வருடா வருடம் போட்டி:

தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் 
ஆகியோர் வருடத்திற்கு ஒரு படம் வீதம் நடித்து வருவதால் ஒவ்வொரு வருடமும் இவர்களது படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடப்பார்கள். 

பின்னடைவு:

இந்தாண்டு வெளியான அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட் போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி அடைந்தாலும், விமர்சன ரீதியாக வெற்றி அடையாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

நேருக்கு நேர் மோதல்:

இப்படிப்பட்ட சூழலில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு விஜய்-அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அஜித்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் பொங்கலை முன்னிட்டு நேருக்கு நேர் மோதியது.

துணிவு - வாரிசு: 

அதேபோல தற்போது விஜய்யின் 66-வது படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படமும் அஜித்தின் 41-வது படமாக 
உருவாகி வரும் துணிவு படமும் பொங்கலை முன்னிட்டு நேரடியாக மோதவிருப்பதாக பேசப்பட்டு வந்தது. விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்ட நிலையில், அஜித்தின் துணிவு ரிலீஸ் குறித்து அப்டேட் எதுவும் வெளி வராமல் இருந்து வந்தது. 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடு:

அதேபோல தமிழ்நாட்டில் துணிவு படத்தை யார் வெளியிட இருக்கிறார்கள் என்பது குறித்து இணைய தளத்தில் 
விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அஜித்தின் துணிவு படத்தினை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருப்பதாகவும், பொங்கலை முன்னிட்டு தான் துணிவு வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.