‘ஆச்சாரியா’ படத்தில் இருந்து காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கிய இயக்குனர்! ஏன் தெரியுமா?

‘ஆச்சாரியா’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது என்று படத்தின் இயக்குனர் உறுதி செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆச்சாரியா’ படத்தில் இருந்து  காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை நீக்கிய இயக்குனர்! ஏன் தெரியுமா?

தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘ஆச்சாரியா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வருகின்ற 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் கொரட்டலா, இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது என்றும், படத்தில் காஜல் குறித்த ஒரு காட்சிகள் கூட இல்லை என்றும் அவர் கூறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், “ஆச்சாரியா” படத்தின் படப்பிடிப்பின்போது தான் காஜல் அகர்வால் திருமணமாகி கர்ப்பம் ஆகிவிட்டார். , இப்படத்தில் சீரஞ்ஜிவிக்கு ஜோடியே காஜல் அகர்வால் என்பதால், படத்தில் வரும் அவருடைய காட்சிகளை நீக்க நடிகர் சீரஞ்ஜீவியிடம் அனுமதி பெற்று தான் அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டதாக இயக்குனர் கூறியுள்ளார்.