நடிகர் சூர்யா குறித்து இப்படி டிவிட் செய்த அமிதாப்... ரசிகர்கள் அதிர்ச்சி!!

சூரரைப் போற்று படத்தைப் பார்த்து அமிதாப் பச்சன் பாராட்டியதை அடுத்து சூர்யா மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.   

நடிகர் சூர்யா குறித்து இப்படி டிவிட் செய்த அமிதாப்... ரசிகர்கள் அதிர்ச்சி!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்றுதிரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் உருவாகியிருந்தது.

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தைப் பார்த்த அமிதாப் பச்சன் படத்தை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். "சூரரைப் போற்று படத்தைப் பார்த்து என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அது கண்களில் வழிந்தது. இந்த தருணத்தை முழுமையாக என்னால் சொல்லில் அடக்கிவிட முடியாது. அதுவே தான் என்னை இந்த பதிவை இட காரணமாய் அமைந்தது. ஒரு பாடல் .. சூர்யா படத்தின் பாடல். சூர்யா தென்னகத்தின் சூப்பர் ஸ்டார். இந்த வீடியோ உங்கள் இதயத்தை உடைப்பதை உணர முடியும். இந்த பாடல் என் கண்ணீரை நிறுத்த என்னால் கட்டுப்படுத்த முடியாததாகிவிட்டது. .. இது ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள உணர்ச்சியைத் தாங்குகிறது" என்று தெரிவித்திருந்தார். அமிதாப் பச்சனின் அந்தப் பதிவு மிகவும் வைரலானது.

தற்போது அமிதாப் பச்சன் பாராட்டியதை அடுத்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.  "இது போன்ற தருணங்கள், இதுபோன்ற பாராட்டும் வார்த்தைகள் மற்றும் இது போன்ற அசாதாரண தருணங்களே சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதிகள். என்னை நெகிழச் செய்துவிட்டது. உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகப்பெரியது சார்" என்று தெரிவித்துள்ளார்.