எந்த துறையாக இருந்தாலும் ஒழுக்கத்துடன் இருந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும் - கானா பாலா!!

கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பாடகர் கானாபாலா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு , போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி விழாவை சிறப்பித்துள்ளார்.

எந்த துறையாக இருந்தாலும் ஒழுக்கத்துடன் இருந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும் - கானா பாலா!!

எந்த துறையாக இருந்தாலும் ஒழுக்கத்துடன் இருந்தால் மட்டுமே பிரகாசிக்க முடியும் என கல்லூரி விழாவில் கலந்துக்கொண்ட கானா பாலா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் 21வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரபல திரைப்பட கானா பாடகர் கானா பாலா, நம்மிடம் திறமை இருந்தால் அதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், ஆனால் எந்த துறையாக இருந்தாலும் மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினார்.

இதையடுத்து கலாச்சார போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.