இவர்களா பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்பாளர்கள்....

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் சினிமா பிரபலங்கள் குறித்த ஒரு உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கின்றது. 

இவர்களா பிக் பாஸ் சீசன் 6 பங்கேற்பாளர்கள்....

கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் தற்போது சீசன் 6 வரும் ஞாயிறு முதல் தொடங்கவிருக்கிறது.

  • பிக்பாஸ் சீசன் 1-ல் ஆரவ்,

  • சீசன் 2-ல் ரித்விகா,

  • சீசன் 3-ல் முகேன் ராவ்,

  • சீசன் 4-ல் ஆரி,

  • சீசன் 5-ல் ராஜூ ஜெயமோகன்

என ஐந்து பேர் டைட்டில் வின்னர்களாகியிருக்கின்றனர். தற்போது நடைபெறவிருக்கும் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க | நாயகன் மீண்டும் வரான்... எட்டுத்திக்கும் பயம் தானே.. பிக்பாஸ் சீசன் 6..தொகுத்து வழங்கும் உலக நாயகன்..!

இந்த பட்டியலில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சின்னத்திரை பிரபலங்கள், ரட்சிதா, மைனா நந்தினி, விசித்ரா, சாந்தி, அமுதவானன்,  ராப் பாடகர் ஏ.டி.கே., சுயாதீன இசைக்கலைஞர் அசல் கொலார், மாடல் அழகி ஷெரினா, ஆயிஷா, வி.ஜே.கதிரவன், வி.ஜே. மகேஷ்வரி, பாடகி ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

மேலும் படிக்க | எப்படி சார்..இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க....- விக்ரமை மெச்சிய விக்ரம்!

மேலும் சில நாட்களுக்கு முன்பு, சிம்புவைக் காதலித்ததாக கூறி அதிர்ச்சியை கிளப்பிய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, ஐஸ்வர்யா ராஜேஷின் உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன், வனிதாவின் முன்னள் காதலர் ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத நிலையில் இந்த 6-வது சீசனில் சர்ச்சைகளுக்கே வித்திட்ட ஜி.பி.முத்து, ராபர்ட், ரட்சிதா போன்றோர் கலந்து கொள்ளவிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. 

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அப்போ இந்து மதமே கிடையாது.. வெள்ளைக்காரன் கொடுத்த பெயர் அது.. அவரே சொல்லிட்டார்.. இப்போ என்ன பண்ண போறீங்க?