’தல’ அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

’தல’ அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தல அஜித் குமார் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபர் யாரென்று காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக அது புரளி என தெரியவந்துள்ளது.