பட வாய்ப்பு தருகிறேன் என தவறான உறவுக்கு அழைத்த நபர்.. வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அனிதா 

பட வாய்ப்பு தருகிறேன் என தவறான உறவுக்கு அழைத்த நபர்.. வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அனிதா 

முதலில் செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்கு வந்த அனிதா சம்பத், குறும்படங்கள் தொடங்கி விளம்பரம் என பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவருக்கு நிறைய படவாய்ப்புகளை சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவருக்கு பல நெகடிவ் கமெண்ட்ஸ்களை வருவதை டாக்கில் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட பிரபலங்களிடம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஏதேனும் வம்பு செய்து கொண்டுதான் இருப்பார்கள். முன்னரெல்லாம் கண்டும் காணாமல் இருந்த பிரபலங்கள் இப்போதெல்லாம் உடனடியாக பதிலடி கொடுத்து விடுகின்றனர்.

அந்த வகையில் சினிமாவில் படவாய்ப்பு வாங்கி தருவதாக சமூகவலைத்தளத்தில் இளம்பெண்ணிடம் கொக்கி போட்டுள்ளார் அந்த இளைஞர்.  அந்த பதிவை பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்மணி. அதை அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து, படவாய்ப்பு தருகிறேன் என இளம் பெண்கள் பலரையும் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என சமூக விஷயத்திற்கு குரல் கொடுத்த அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.