3 வருஷமா தொடர்ந்து டைட்டில் வின்னர்… கெத்து காட்டும் எவர் சார்மிங் விஜய் தேவரகொண்டா

டைம்ஸ் பத்திரிகை நடத்தும் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஆண்கள் பட்டியலில் நடிகர் விஜய் தேவரகொண்டா மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

3 வருஷமா தொடர்ந்து டைட்டில் வின்னர்… கெத்து காட்டும் எவர் சார்மிங் விஜய் தேவரகொண்டா

கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் தேவரகொண்டாவின் வளர்ச்சி விண்ணைத் தொட்டுள்ளது. இந்திய அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள நடிகர் ஆகியுள்ளார். எனவே இந்திய அளவில் இவரது படங்களுக்கு பெரும் மார்க்கெட் உருவாகியுள்ளது.

இது பல வருடங்கள் இடைவிடாமல் முயற்சித்த அவருக்கு கிடைத்துள்ள விஸ்வரூப வெற்றி. அதிலும் குறிப்பாக அதிக பெண் ரசிகர்களைக் நடிகர் விஜய் தேவரகொண்டா கொண்டுள்ளார். 

தற்போது விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். டைம்ஸ் பத்திரிகை நடத்தும் மக்களால் மிகவும் விரும்பப்படும் ஆண்கள் சர்வேயில் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து 3 ஆண்டுகள் முதலிடம் பிடித்துள்ளார்.

2019, 2020, 2021 என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். எப்பேர்ப்பட்ட நடிகர்களாக இருந்தாலும் மற்ற நடிகர்கள் நுழைய பின்தங்கிவிடுவர். ஆனால் விஜய் தேவரகொண்டா தொடர்ந்து 3 ஆண்டுகள் மக்கள் மனதில் இடம் பிடித்து கெத்து காட்டியுள்ளார். இதை வைத்தே விஜய் தேவரகோண்டாவின் வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ளலாம்.