பட்டய கிளப்பும் காந்தாரா.. சூப்பர் ஸ்டார் பாராட்டு.. கனவு நனவானதாக ரிஷப் நெகிழ்ச்சி..!

உள்ளூர் கதைகளை படமாக்க இந்த வாழ்த்து என்னை தூண்டியிருக்கிறது - ரிஷப்..!

பட்டய கிளப்பும் காந்தாரா.. சூப்பர் ஸ்டார் பாராட்டு.. கனவு நனவானதாக ரிஷப் நெகிழ்ச்சி..!

காந்தாரா படத்திற்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு படத்தின் ஹீரோவான ரிஷப் ட்விட்டர் 
வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். 

காந்தாரா:

கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹோம்பெல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள காந்தாரா எனும் கன்னட திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்பத்தின் கதை எழுதி, இயக்கி நடித்தும் இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. 

குவியும் பாராட்டுகள்:

கர்நாடகாவில் நடைபெறும் கம்பாலா வீர விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வசூல் 
ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. படத்தை பார்த்த தமிழ் நடிகர்கள் பலரும் கூட இப்படத்திற்கு தங்களது 
பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். 

சூப்பர் ஸ்டார் வாழ்த்து:

உதாரணத்திற்கு நடிகர்கள் தனுஷ், சிம்பு, கார்த்தி என தமிழ் ஹீரோக்களும், பிரித்விராஜ் உட்பட மலையாள நடிகர்களும் தங்களது வாழ்த்துகளை காந்தாரா படத்திற்கு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட தனது வாழ்த்தினை இப்படக்குழுவுக்கு தெரிவித்திருந்தார். 

தலைசிறந்த படம்:

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், ”தெரிந்ததை விட தெரியாதது அதிகம். சினிமாவில் இதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது எனவும், காந்தாரா திரைப்படம் என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்திருக்கிறது. நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆப். இந்திய சினிமாவின் இந்த தலைசிறந்த படத்தை கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள்” என தெரிவித்துள்ளார். 

கனவு நனவாகியுள்ளது:

இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள ரிஷப் ஷெட்டி, ” நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.  சிறுவயது முதலே உங்களின் ரசிகன் நான். உங்கள் பாராட்டு மூலம் என் கனவு நனவாகி உள்ளது, உள்ளூர் கதைகளை படமாக்க இந்த வாழ்த்து என்னை மேலும் தூண்டியிருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.