கோவிந்த் வசந்தாவுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ள உறவு.. வெளிப்படையாக பதிவு போட்ட நடிகை

கோவிந்த் வசந்தாவுக்கும் ஐஸ்வர்யா லட்சுமி உள்ள உறவு.. வெளிப்படையாக பதிவு போட்ட நடிகை

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பிறந்தநாள் முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவருடன் நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளரின் உறவு பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.

மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி.  ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது ஒரு ரெஸ்டாரன்டில் தன்னுடைய நண்பரான 96 படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

கோவிந்த் வசந்தா மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். விஜய் சேதுபதியின் 96 படத்தின் இசையமைப்பாளராக இருந்தார். அதை தொடர்ந்து விஜய்சேதுபதியின் சீதகாதி, துக்ளக் தர்பார் போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் கோவிந்த் வசந்தாவும் உறவினர்கள் என்று தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவிந்த் உடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை அவரை அண்ணன் என்றுதான் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.