நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது..!!

நடிகர் ரஜினிகாந்துக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது..!!

இந்தியத் திரைத்துறைக்கு அளித்தபங்களிப்புக்காகவும், ஆற்றிய சாதனைகளுக்காகவும், ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிக்கு அந்த விருது வழங்கப்பட்டது. முன்னதாக ரஜினியின் திரைப்பயணம் குறித்த காட்சி திரையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ரஜினிகாந்துக்கு சால்வை அணிவித்து, விருதை வழங்கி கவுரவித்தார்.

விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் மேடையில் பேசிய ரஜினிகாந்த், இந்த விருதை, இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு அர்ப்பணிப்பதாகக் கூறினார். தமிழக ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைத்துறையின் உயரிய விருதினைப் பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெஞ்சம்நிறைந்த வாழ்த்துகள் என்றும் திரைவானின் சூரியன் ரஜினி , தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும் என்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,