ரசிகர்களோடு டான் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் டான் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. 

ரசிகர்களோடு டான் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் டான்.

இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் சமுத்திரகனி எஸ்.ஜே.சூர்யா , சூரி , பால சரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா நடித்துள்ளார். 

இன்று அதிகாலை முதலே திரையரங்கு முன் குவிந்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் கட் அவுட் வைத்தும் அதற்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கல் முழங்க ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் இத்திரைப்படத்தை படக்குழு ரசிகர்களோடு திரையரங்கில் கண்டு ரசித்தனர். அதன் படி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களோடு முதற்காட்சி பார்த்து ரசித்தார்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இசையமைப்பாளர் அனிருத் நடிகர்கள் ஷாரிக் மற்றும் ஆர்.ஜே.விஜய், நடிகை சிவாங்கி ஆகியோரும் ரசிககர்ளுடன் டான் படத்தை பார்த்து ரசித்தனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.