10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தனுஷ் திரைப்படம்.. வசூலை வாரி குவித்து சாதனை..!

தியேட்டர்களில் ’3’ திரைப்படத்தை கொண்டாடும் ஆந்திரா ரசிகர்கள்..!

10 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திராவில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட தனுஷ் திரைப்படம்.. வசூலை வாரி குவித்து சாதனை..!

3:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’3’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடமும், இளைஞர்களிடமும், காதலர்களிடமும் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படம். 

காதலர்களுக்கு டானிக்:

காதல் என்பது மூன்று பரிணாமங்களில் எப்படி எல்லாம் வளரும்? அந்த காதலுக்காக எந்த எல்லைக்கு செல்லும் என்பதை உணர்ச்சிப் பொங்க காண்பித்திருந்தது இப்படம். பள்ளி பருவத்தில் ஏற்படும் ஒரு காதல், படிப்படியாக வளர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டால் எப்படி இருக்கும் என காதல் ஜோடிக்கு டானிக் கொடுத்தது போல் இனிமையாக காண்பித்திருக்கும். 

அசைப்போடும் நினைவுகள்:

பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை பிடித்துப் போனால், எப்படி அப்பெண்ணிடம் காதலை அந்த இளைஞர் வெளிப்படுத்துவான் என்பதை திரையில் காட்டியதன் மூலம், 90ஸ் கிட்ஸ்களுக்கு தங்களது நினைவுகளை அசைப்போட தூண்டியது 3 திரைப்படம். 

கதாபாத்திரத்தில் வாழ்ந்த நடிகர்கள்:

அதன்பின் அந்த காதல் படிப்படியாக வளர்ந்து திருமணம் என்ற இடத்திற்கு வரும் போது என்ன மாதிரியான பிரச்னைகளை சமாளிக்கும்? என்பதை எதார்த்தமாக பதிவு செய்தது. படத்தில் காதல் ஜோடியாக நடித்திருந்த தனுஷும், ஸ்ருதிஹாசனும் வெறும் தங்களது கதாபாத்திரங்களை நடித்து மட்டும் செல்லவில்லை. வாழ்ந்து காட்டி சென்றிருந்தனர். 

ஹிட் பாடல்கள்:

அந்த காதல் திருமணத்தில் கைக்கூடியதோடு நிற்காமல் ஒரு மருத்துவ ரீதியான மன அழுத்தத்திற்கு ஆளாகி, எங்கே தனது காதலியை வருத்தப்பட வைத்துவிடுவோமோ என எண்ணி, இறுதியில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தனுஷ் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி எல்லாம், காதலர்களுக்கு கண்களில் தண்ணீரை பெருக்கெடுத்து ஓட வைத்தது எனலாம். அனிரூத் இசையில் படத்தில் இடம் பெற்ற ஒரு ஒரு பாடலும் மனிதனின் அவ்வப்போது வாழ்க்கைக்கு தேவையான பாடல்களாக அமைந்தது. 

ஆந்திராவில் வசூல் சாதனை:

தமிழ்நாட்டில் இன்று வரையிலும் காதலர்களின் நினைவுப் படமாக இருந்து வரும் 3 படத்தை ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 10 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு தமிழ் திரைப்படம், தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அங்கேயும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறதாம் 3.