தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் தனுஷ்

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநருடன் இணையும் தனுஷ்

1999-ல் டாலர் டிரீம்ஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக சேகர் கம்முலா அறிமுகமானவர். 

அந்தப் படத்திலேயே அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனந்த், கோதாவரி, லீடர், ஃபிடா போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார்.

Image

இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கும் படத்தில்தனுஷ் நடிக்க போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகிறது. 

அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்தில் நடித்து வரும் தனுஷ், இயக்குநர் கார்த்திக் நரேன் படத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.