ஜூலை 8-ல் மீண்டும் தனுஷின் துள்ளுவதோ இளமை திரையிடப்படுகிறதா?

டிஜிட்டலில் மீண்டும் திரையிட இருப்பதாக இணையத்தில் போஸ்டர்கள் பரவல்..!

ஜூலை 8-ல் மீண்டும் தனுஷின் துள்ளுவதோ இளமை திரையிடப்படுகிறதா?

டிஜிட்டல் முறையில் மீண்டும் தனுஷின் படத்தை திரையில் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று விட்ட தனுஷின் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் வரிசையாக ஃபிளாப் ஆகின. அதிலும் மாறன் திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்தடுத்தப் படங்களில் ஹிட் கொடுக்க வேண்டிய சூழலில் அவர் உள்ளார். தற்போது இவரது கைவசம் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி ஆகிய படங்கள் உள்ளன. 

ஜூலை 8-ல் மீண்டும் துள்ளுவதோ இளமை..

இதில் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள நிலையில், நானே வருவேன், வாத்தி படங்கள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. செல்வராகவனின் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா தாயாரிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் அன்றைய இளைஞர்களிடம் வெற்றி அடைந்தது. 20 வருடங்களுக்கு பிறகு துள்ளுவதோ இளமை திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வரும் 8-ம் தேதி திரையில் வெளியாக உள்ளதாக போஸ்டர்கள் இணையத்தில் பரவி வருகிறது.  

மேலும் படிக்க : https://www.malaimurasu.com/search?q=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D&sys_lang_id=1