டுவிட்டர் பக்கத்தில் இணைந்தாரா நடிகர் வடிவேலு.?

திரையுலக பிரபலங்களின் பெயர்களில் போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

டுவிட்டர் பக்கத்தில் இணைந்தாரா நடிகர் வடிவேலு.?

திரையுலக பிரபலங்களின் பெயர்களில் போலி டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்படுவது வழக்கமாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில்  பிரபல நடிகர்களின் பெயர்களில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கப்படுகிறது. நடிகர்கள் மயில்சாமி, சார்லி, செந்தில் உள்ளிட்டோரின் பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. அதனை மறுத்த அவர்கள் போலீஸிலும் புகார் அளித்தனர்.

இதேபோல் நடிகர் விஜய்யின் மகன் மற்றும் மகள் பெயரிலும் டிவிட்டரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதனை தொடர்ந்து அவர்களுக்கு எந்த சோஷியல் மீடியாவிலும் கணக்கு இல்லை என விஜய் தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில்,பிரபல காமெடி நடிகர் வடிவேலு டிவிட்டரில் இணைந்துள்ளதாக ஒரு பதிவு வைரலாகி வருகிறது.

அப்பதிவில் வடிவேலு மிகவும் ஸ்டைலாக கண்ணாடி அணிந்துள்ள புகைப்படமும், மற்றும் டு விட்டரில் இணைவது மகிழ்ச்சி! தமிழ் மக்களுக்கு நன்றி எனவும் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இதுவும் போலி கணக்குதான் என்று கூறி வருகின்றனர்.

மேலும் எத்தனை முறைதான் இவரை டிவிட்டரில் இணைப்பீங்க என்றும் கேட்டு வருகின்றனர். வடிவேலு பெயரில் உள்ள டிவிட்டை பார்த்த ஒரு  ரசிகர், மறுபடியும் ஃபேக் ஐடியா.. அப்படியே ஓடிப்போயிடு என பதிவிட்டுள்ளார்.