81-வது பிறந்தநாளை மனைவியோடு கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்..!

விஜய் வாழ்த்து கூறி இருப்பாரா என ரசிகர்கள் கேள்வி..!

81-வது பிறந்தநாளை மனைவியோடு கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்..!

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 81-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ஆனால் அவரது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களில் விஜய் இல்லாதது தற்போது பேசு பொருளாகியுள்ளது. 1978ம் ஆண்டு அவள் ஒரு பச்சைக் குழந்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

புகைப்படங்களை பகிர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்..

இவரது மகன் நடிகர் விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில், சில ஆண்டுகளாக தந்தைக்கும் மகனுக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது என்பதையும், விரைவில் அது சரியாகிவிடும் என்பதையும் சந்திரசேகரே பல நேர்காணல்களில் கூறியுள்ளார். இந்த நிலையில், நேற்று தனது 81-வது பிறந்தநாளை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் குடும்பத்துடன் எளிமையாக கொண்டாடினார். தனது மனைவி ஷோபா சந்திரசேகருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அவர். 

விஜய் வாழ்த்து கூறியிருப்பாரா?

அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் விஜய் இல்லை. அவருடைய பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறிய நிலையில், அவரது மகன் வாழ்த்து தெரிவித்து இருப்பாரா என்ற கேள்வி தான் அவரது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.