லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் - சாதரணமாக இருக்கவே ஆசைபடுகிறேன்: நடிகை சாய்பல்லவி தெரிவிப்பு!!

மலையாள திரைப்படம் பிரேமம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சாய்பல்லவி, அதன் பின்னதாக தமிழ்,தெலுங்கு என திரைப்பட உலகில் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து உயர்ந்து நின்றார். 

லேடி பவர் ஸ்டார் பட்டம் வேண்டாம் - சாதரணமாக இருக்கவே ஆசைபடுகிறேன்: நடிகை சாய்பல்லவி தெரிவிப்பு!!

சமீபத்தில் வெளியான படத்திலிருந்து ரசிகர்கள் நடிகை சாய்பல்லவியை லேடி பவர் ஸ்டார் என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதே வாசகத்துடன் போஸ்டர்களும் ஆங்காங்கே ஓட்டி வருகின்றனர். 

இதுகுறித்து சாய் பல்லவி அளித்துள்ள பேட்டியில், ''என் பெயருக்கு முன் லேடி பவர் ஸ்டார் என்று பட்டம் வேண்டாம். இப்படி பட்டம் வைத்துக் கொள்வது சரியல்ல. இது போன்ற பட்டங்களுக்கு நான் ஈர்ப்பு ஆக மாட்டேன். ரசிகர்கள் அன்பினால் வளர்ந்தேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என மட்டுமே ஆசைப்படுகிறேன். இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களினால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தேன்.

இன்னும் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் சாதாரணமாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இதுபோன்ற பட்டங்களால் மனதில் நெருக்கடி ஏற்படுமே தவிர வேறு எந்த பயனும் இல்லை" என்றார்.