நடிகை தேவை.. விளம்பரத்தை பார்த்து நிவின் பாலிக்கு ஹீரோயினான பிரபல நடிகை

நடிகை தேவை.. விளம்பரத்தை பார்த்து நிவின் பாலிக்கு ஹீரோயினான பிரபல நடிகை

மோலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் சில படங்கள் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நிவின் பாலி. அதுவும் இவரது நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

தற்போது வளர்ந்து வரும் நிவின் பாலி சமீபகாலமாக வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் மூலம் பெரிய அளவு மலையாளத்தில் தனக்கென ஒரு மார்க்கெட்டை நிலை நிறுத்தியுள்ளார்.

சமீபத்தில் பிரபல நடிகை ஒருவர் நிவின் பாலி படத்தில் நடிப்பதற்கு நடிகை தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நடிகை ஆனதாக சொல்லிய சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அது வேற யாரும் இல்லை தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் நிவின் பாலி படத்தில் நடிப்பதற்கு நடிகை தேவை என்ற விளம்பரத்தை பார்த்து நடிகை ஆனதாகவும் அதன்பிறகுதான் அடுத்தடுத்து தனுஷ், பகத் பாசில் போன்ற நடிகர்களுடன் நடித்ததாகவும் கூறியுள்ளார்.