கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேராத பிரபல நடிகைகள்.!!

கொடிகட்டிப் பறந்த காலத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேராத பிரபல நடிகைகள்.!!

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் விஜய் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட் .

விஜய் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் ஒரு சில நடிகைகளுடன் இன்றுவரை அவரால் ஜோடியாக நடிக்க முடியவில்லை. அதற்கு வாய்ப்பு ஒரு காரணமாக இருந்தாலும் காலமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. மீனா, விஜய்யுடன் எந்த படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விஜயுடன் நடனமாடி இருப்பார்.  

இவரை தொடர்ந்து ரோஜா பல படங்கள் நடித்துள்ளார். விஜயும் ரோஜாவும் ஃபேமஸ் ஆக இருந்த காலத்திலேயே இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 

தற்போது விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் பார்த்து அனைத்து நடிகர்களுமே அசந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு இவரது படங்கள் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகின்றன. தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.