டி.ஆர்.பிக்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் அஜித், விஜய், சிம்பு படங்களை களமிறக்கும் பிரபல தொலைக்காட்சிகள்! குஷியில் ரசிகர்கள்

அஜீத், விஜய், சிம்பு என மூன்று மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களும் ஒரே நாளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உள்ளதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

டி.ஆர்.பிக்காக ஒரே நாளில் ஒரே நேரத்தில் அஜித், விஜய், சிம்பு படங்களை களமிறக்கும் பிரபல தொலைக்காட்சிகள்! குஷியில் ரசிகர்கள்

வருகின்ற மே 1 ஆம் தேதி அரசினர் விடுமுறை என்பதால் பிரபல தொலைக்காட்சிகள் போட்டி போட்டு மாஸ் ஹீரோக்களின் படங்களை களமிறக்குகிறது. அதன்படி ஜீ டிவியில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ளது. மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

அதற்கு போட்டியாக சன் டிவியில் அதே நாளில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் சரியாக 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே கடுமையான டிஆர்பி ரேட்டிங் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியும் தன் பங்குக்கு அதே நாளில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தை ஒளிப்பரப்ப உள்ளது. இதனால் அன்றையதினம் தொலைக்காட்சிகளுக்குள் கடுமையான நானா நீயா என்ற போட்டி நிலவ உள்ளது.