’அவதார் 2’ வே இன்னும் வரலையாம்; அதுக்குள்ள 3, 4, 5 ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு? எப்போ தெரியுமா?

’அவதார் 2’ பாகத்தின் டைட்டில் வெளியானதையடுத்து, 3, 4, 5 ஆம் பாகத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.

’அவதார் 2’ வே இன்னும் வரலையாம்; அதுக்குள்ள 3, 4, 5 ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு? எப்போ தெரியுமா?

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ‘அவதார்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் உலக சாதனை படைத்தது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவதார் 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். 

இப்படி எதிர்பார்ப்பில் இருந்து வந்த ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக, கடந்த சில வருடங்களாக உருவாகி வந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது.  இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'The Way of Water’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

”அவதார் 2” படத்தின் அப்டேட் மட்டுமில்லாமல், அடுத்ததாக உருவாக உள்ள அவதார் 3-ஆம் பாகம், 4-பாகம், 5-ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி மற்றும் அதற்குரிய டைட்டில் குறித்த அப்டேட்களும் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் இதோ; அவதார் 2 - ரிலீஸ் தேதி 16, 2022 டைட்டில்: The Way of Water , அவதார் 3 - ரிலீஸ் தேதி 20, 2024 டைட்டில்: The Seed Bearer , அவதார் 4 - ரிலீஸ் தேதி 18, 2026 டைட்டில்: The Tulkun Rider , அவதார் 5 - ரிலீஸ் தேதி 22, 2028 டைட்டில்: The Quest for Eywa.