தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா...? இயக்குனர் கஸ்தூரி ராஜா சொல்வது என்ன...?

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா...? இயக்குனர் கஸ்தூரி ராஜா சொல்வது என்ன...?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து திரைபிரபலங்கள் அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

என்னதான் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்திருந்தாலும், இன்னும் சட்டபடி நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து பிரியவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இயக்குனரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா அளித்த பேட்டி ஒன்றில் இருந்து இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் பேட்டி ஒன்றில் பேசியபோது, ’தனுஷ் - ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது கணவன் மனைவி இடையே நடக்கும் குடும்ப சண்டை தான் என்றும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர்கள் இரண்டு பேரும் தற்போது சென்னையில் இல்லையென்றும், ஜதராபாத்தில் இருப்பதால் நான் அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு இருவருக்கும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளேன் என்றும் கூறியுள்ளார். கஸ்தூரிராஜாவின் அறிவுரையை ஏற்று தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையும், திரையுலக பிரபலங்களிடையும் அதிகமாக இருந்து வருகிறது.