’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா...! - நாளை வெளியீடு

’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா...! - நாளை வெளியீடு

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நாளை நடைபெறவுள்ளது. விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விளம்பரங்களில் நடனமாடி கலக்கி வந்த லெஜண்ட் சரவணன் தற்போது திரைப்படத்தில் நடனமாடி கலக்கிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா, தி லெஜன்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

நாளை நடைபெற உள்ள டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பான்-இந்தியா நட்சத்திரங்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.