”கழுத்தில் பல் தடம்...முகத்தில் நக கீறல்” இருந்தும் ஏன் தாமதம்..? ஹேமந்த் தான் குற்றவாளி? பகீர் தகவலை வெளியிட்ட சித்ராவின் தாயார்!

”கழுத்தில் பல் தடம்...முகத்தில் நக கீறல்” இருந்தும் ஏன் தாமதம்..? ஹேமந்த் தான் குற்றவாளி? பகீர் தகவலை வெளியிட்ட சித்ராவின் தாயார்!

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் மர்மம் நீடித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அவரது தாயார் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ராவின் கணவர் ஹேமந்த் மாஜி அமைச்சர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதில் தொடர்பிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவரது தாயார் நேற்று அளித்த பேட்டியில் தன் மகள் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த் மட்டும் தான் காரணம் என பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.  

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தோன்றிய vj சித்ரா படிப்படியாக தன்னை மேம்படுத்திக்கொண்டு பல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் தோன்றிய பிறகு தான் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. இப்படி இருக்க திடீரென சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9 ம் தேதி  நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மக்கள் மனதில் நீங்காத வடுவாக மாறியுள்ளது. இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சித்ரா தற்கொலை செய்துகொள்வதற்கு அவரின் கணவர் ஹேமந்த் மற்றும் தாய் விஜயா கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல் துறையினர் தெரிவித்து இருந்தனர். மேலும் அடுத்தடுத்து சித்ராவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அவரின் உதவியாளர் என பலதரப்பினரிடையும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு கடந்த சில தினங்களாக சூடு பிடித்துள்ளது. 

இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக சித்ராவின் கணவர் ஹேமந்த்,  சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். மேலும் சித்ரா மரணத்திற்கு முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி, தொழிலதிபர் ஆகியோர் தான் காரணம் எனவும் தெரிவித்திருந்தார். 

சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் ஹேமந்த் எதற்க்காக தற்போது வந்து அவதூறு கூறுகிறான் என சித்ராவின் பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளின் தொடர்பு இருப்பதாக கூறுகிறான் ஆனால் நாங்கள் கூறுகிறோம், தங்களது மகள் இறப்பிற்கு ஹேமந்த் மட்டும் தான் முழுக்க முழுக்க காரணம் என சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக நேற்று அவர்கள் அளித்த பேட்டியில்,  ” சித்ரா தற்கொலை செய்துகொள்ள வில்லை, ஹேமந்த் தான் கொலை செய்திருக்கிறார். என் மகளை கழுத்தில் கடித்தது போன்ற பல் பதிந்த காயம் உள்ளது. அது புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. மேலும் அவளின் முகத்தில் நக கீறல்கள் பதிந்துள்ளது. அது நிச்சயம் ஹேமந்த் உடைய நக கீறல் தான். என் மகள் தற்கொலை செய்துகொண்ட அன்று இரவு வேறு யார் இருந்தார்கள்..ஹேமந்த் தானே உடன் இருந்தான். என் மகள் அன்று 1.30 மணிக்கு இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் எங்களுக்கு காலை 5 மணிக்கு தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று வரை என் மகள் எத்தனை மணிக்கு இறந்தார் என்பது கூட எங்களுக்கு தெரியவில்லை. அப்போது இடைப்பட்ட நேரத்தில் என் மகளை என்ன செய்தார்கள் என்பது கூட தெரியவில்லை.

ஒரு ஆண் சம்பாத்தித்து வீடு, பங்களா வாங்கினால்.அது நல்ல வழியில் வந்தது. இதே ஒரு பெண் கஷ்டபட்டு சம்பாதித்து முன்னேறி வந்தால் அது தப்பான வழியில் சம்பாதித்தார் என கூறுகின்றனர். இது மிக தவறு. என் மகள் கஷ்டப்பட்டு சம்பாதித்தார். என் மகளை கொலை செய்திருக்கிறான் ஹேமந்த். அரசியல் பிரபலங்கள் யாரும் இதில் சம்மந்தப்பட்டாக எனக்கு தெரியவில்லை.அனால் ஹேமந்த் தான் காரணம். நண்பன் ஒருவர் இவ்வளவு நாள் கழித்து பேட்டியளிக்கிறார் , ஹேமந்த் வந்து பேட்டி கொடுக்கிறான். இவ்வளவு நாள் என்ன கோமாவில் இருந்தனா? அல்லது போதையில் இருந்தனா? இவ்வளவு எவிடென்ஸ் இருந்தும் ஏன் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. போன அரசு தான் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த அரசாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அரசு தான் ஆட்சிக்கு வரவேண்டும் என நாங்கள் கடவுளை பிரார்த்தனை செய்தோம். எங்கள் பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தபடி திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. பலமுறை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. ஊடக நண்பர்கள் நீங்கள் தான் முதல்வரை சந்திக்க உதவி செய்ய வேண்டும். எனது மகள் ஊடகத்தை மிகவும் நம்பினால், நாங்களும் நம்புகிறோம். முதல்வரை சந்திக்க உதவுங்கள் " என கூறியுள்ளனர். மேலும் அவரது தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.