ஐ லவ் யு குமார்... உங்கள் அன்பிற்கு நன்றி! வைரலாகும் ஹுயூமா குரேஷியின் ட்விட்டர் பதிவு ..!

வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகருக்கு நன்றி கூறி ட்விட்டரில் ஹுயூமா குரேஷி பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

ஐ லவ் யு குமார்...  உங்கள் அன்பிற்கு நன்றி! வைரலாகும்  ஹுயூமா குரேஷியின் ட்விட்டர் பதிவு ..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரின் வலிமை படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கலவையான வரவேற்புகள் வந்தாலும் பாக்ஸ் ஆபீசில் கலெக்ஷன் குவித்து வருகிறது. 

வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு முதல் நாள் கூட்டமும், முதல் நாள் வசூலும் அஜித் படத்திற்கு உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான குமார் என்பவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகை ஹுயூமா  குரேஷி ,வலிமை படத்தை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.அப்போது தான் அவர் அந்த இளைஞரை சந்தித்தார். அவரிடம் ஹுயூமா, வலிமை படம் பார்த்தீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு அவர் படம் வெளியானது முதல் 5 முறை பார்த்துவிட்டேன் என்றார். படம் வெளியான 3 நாளில் 5 முறை பார்த்துவிட்டேன் என அந்த இளைஞர் குமார் கூறியது ஹுயூமாவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனையடுத்து அந்த இளைஞரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஹுயூமா. அந்த பதிவில்  " இது குமார். சென்னையிலுள்ள ஹோட்டல் கிரௌன் ப்ளாசாவில் பணியாற்றி வருகிறார்.பிப்ரவரி 24ம் தேதி வெளியான வலிமை படத்தை 5 முறை பார்த்துள்ளார். ஐ லவ் யு குமார். நீங்கள் தான் உண்மையான ரசிகர். உங்கள் அன்பிற்கு நன்றி " எனக் கூறியுள்ளார்.