பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் செட் செலவு மட்டும் 100 கோடியா?

பூஜா ஹெக்டே நடித்துள்ள படத்தின் செட் செலவிற்கு மட்டும் 100 கோடி ரூபாய் செலவு என தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே நடிக்கும் படத்தின் செட் செலவு மட்டும் 100 கோடியா?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட். இப்படத்தின் நாகயகியாக நடித்துள்ளவர் பூஜா ஹெக்டே. இவர் நடித்துள்ள அடுத்த படத்தின் செட் செலவிற்கு மட்டும் 100 கோடி ரூபாய் என தகவல் வெளியாகி திரையுலகை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. இந்த படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் கோடிக்கணக்கான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்ற நிலையில், அதில் செட் செலவிற்கு மட்டும் 100 கோடி ரூபாய் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என மொத்தம் 5 மொழிகளில் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.