மானநஷ்ட வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.  

மானநஷ்ட வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தாவுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு

தென்னிந்திய திரையுலகில் பிசியாக வலம் வரும் நடிகை சமந்தா தொடர்ந்த மானநஷ்ட வழக்கை விசாரணை செய்த நீதிபதி அதிரடியான உத்தரவினை பிறப்பித்துள்ளார். தெலுங்கு பிரபலம் நாகர்ஜீனாவின் மகனும்,பிரபல நடிகருமான நாகஷைத்தன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக தங்களது அதிகாரப்பூரவ விவகாரத்து அறிவிப்பை முகநூல் பக்கத்தில் வெளியிட்டனர். அதற்கு பிறகு நடிகை சமந்தாவின் விவாகரத்து பற்றிய அவதூறான தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது. இதன் காரணமாக நடிகை சமந்தா தங்களுடைய விவகாரத்து அறிவிப்பு குறித்து தன்னைப்பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக  சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத்தில் உள்ள கூகட்பள்ளி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தார். இவருடைய சார்பில் ஐகோர்ட்டு வக்கீல் பாலாஜி மானநஷ்ட வழக்கு மனுவை தாக்கல் செய்து, வலைத்தளங்களில் அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட்டார்.மேலும்,ஏற்கனவே யூ-டியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் நீக்கிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேபோல நடிகை சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை குறித்த பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் எனவும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.