முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய காஜல் அகர்வால்: இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள் !!

அன்னையர் தினத்தன்று காஜல் அகர்வால் தனது ஆண் குழந்தை நீலின் முதல் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்; குட்டி இளவரசருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். 

முதல் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய காஜல் அகர்வால்: இணையத்தில் வைரலாகும் போட்டோக்கள் !!

காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் கௌதம் கிட்ச்லு ஏப்ரல் 19 அன்று தங்களின் முதல் குழந்தையான ஆண் குழந்தையை வரவேற்றனர்.  அன்னையர் தினத்தன்று காஜல் அகர்வால் தனது ஆண் குழந்தை நீலின் முதல் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதோடு, தனது குட்டி இளவரசருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் காஜல் அகர்வால்.

அன்னையர் தினமான இன்று, காஜல் அகர்வால் தனது பிறந்த ஆண் குழந்தை நீலுடன் சில மனதைக் கவரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 
முதல் முறையாக தனது குழந்தையை சோசியல் மீடியாவில் பதிவிட்ட காஜல், தனது மகன் நீலுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், "நான் யாருடன் இந்த முதல் அனுபவத்தை அனுபவித்ததற்கு நன்றி. அதைச் செய்யக்கூடியவர்கள் வேறு யாரும் இல்லை, என் குட்டி இளவரசரே, கடவுள் உன்னைத் தேர்ந்தெடுத்தார்" என்று எழுதினார். தொடர்ந்து எழுதிய அவர்,

"நீ எவ்வளவு விலைமதிப்பற்றவனாக எப்போதும் எனக்கு நீ இருப்பாய் என்பதை நீ அறிய விரும்புகிறேன். நான் உன்னை என் கைகளை பிடித்து, உன்னுடைய சிறிய கையை என் கைகளில் பிடித்து, உன் சூடான சுவாசத்தை உணர்ந்து, உன் அழகான கண்களைப் பார்த்த தருணத்தை நான் எப்போதும் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நீ என் முதல் குழந்தை. என் முதல் மகன். என் முதல் எல்லாம், உண்மையில். வரவிருக்கும் ஆண்டுகளில், நான் உனக்கு கற்பிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். ஆனால் நீ ஏற்கனவே எனக்கு எல்லையற்ற பலவற்றை கற்றுத் தந்திருக்கிறாய். தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய். உனது தூய அன்பு, என்னை தன்னலமற்றவராக இருக்கக் கற்றுக் கொடுத்தாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருப்பது சாத்தியம் என நீ எனக்குக் கற்றுக் கொடுத்தாய்” என நீண்ட கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இது அண்டஹ் கடிதத்தின் ஒரு பகுதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

"நீ வலுவாகவும் இனிமையாகவும் வளரவும், மற்றவர்களுக்கான இதயம் இருக்கவும் நான் பிரார்த்திக்கிறேன். இந்த உலகம் உன் பிரகாசமான மற்றும் அழகான ஆளுமையை மழுங்கடிக்க வேண்டாம் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீ தைரியமாகவும், கனிவாகவும், தாராளமாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இதில் ஒரு பங்கை நான் இப்போதே பார்த்து விட்டேன். உன்னை என் கைகளில் பிடித்து நீ என்னுடையவன் என சொல்வதில் நான் பெருமிந்தம் கொள்கிறேன்” என, தனது அழகான தருணத்தை நீல் தன் கைகளில் அமைதியாக உறங்கும் புகைப்படத்துடன்  புதிய தாயான காஜல் அகர்வால் பதிவிட்டிருந்தார்.

இது தற்போது இணையத்தில் வைரலாகி 1 மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ரசிகர்கள் அவருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை பதிவிட்ட வருகின்றனர்.